
திருமண வாழ்க்கை வெற்றி பெறவேண்டும் என்றால் முதலில் மணம் புரியும் பெண்ணுக்கும்,ஆணுக்கும்,அவர்களுக்கு திருமண்த்திற்கு பிற்கான அவர்களுக்குஉரிய கடமைகளை நன்றாக உணர வைக்க வேண்டும்.ஒரு ஆண் தன் குடும்பததை காப்பாற்ற உழைக்க வேண்டும்.ஒரு பெண் குடும்பத்தை நிர்வகிக்கவேண்டும்.கணவன் மனைவியின் சுயமரியாதையை மதிக்க வேண்டும்.அவளுக்கும் தனி விருப்பங்கள்
வெறுப்புகள் இருக்கும்,அதை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.அவ்ளின் பிறந்த வீட்டாரிடம் அன்பு காட்ட வேண்டும்.
குடும்ப பிரச்சனைகள அவளுடன் கலந்து பேசி முடிவு எடுக்க வேண்டும்.அவளுக்கு உற்ற தோழனாகவும்,பாதுகாவலனாகவும், நல்ல காதலன் ஆகவும் இருக்க வேண்டும்.ஒரு பெண் ஆணிடம் எதிர்பர்ப்பது அன்பு, காதல்,சுயமரியாதை,பாதுகாப்பு , ஆகிய இவைகள் தான்.எனவே இவைகளை கொடுக்ககூடிய மனம் உள்ள ஆண்களே திருமணம் புரிய வேண்டும் .
பெண்ணுக்கும் இது போல கடமைகள் உண்டு.கணவனின் எண்ணங்களை மதிக்க வேண்டும்.அவன் குடும்பத்தினரை மதிக்க வேண்டும்.ஒருவரை ஒருவர்
புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.வருமானதிற்குள் குடும்பம் நடத்தனும்.தேவை எனில் வேலைக்கு போகவும் தயங்கக் கூடாது.இருவருமே ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்
இதையெல்லாம் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.என்னால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுவது கஷ்டம் என்று நினைத்தால் தயவு செய்து திருமணம் செய்து கொள்ளாதீர்கள்
இதை ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளைகளுக்கு புரிய வைக்க வேண்டும். அவவாறு செய்தால் பிள்ளைகளின் திருமண வாழ்க்கை வெற்றிகரமானதாக அமையும்.
No comments:
Post a Comment